தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும்.
தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற உள்ளது.
இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…