மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.
மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ தெரிவித்திருந்தது. அதாவது, நாடு முழுவதும் மொத்தமாக 23% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்திற்கு கடந்த 11-ம் தேதி வரை வழங்கப்பட்ட 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% தடுப்பூசிகளை வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். அதில், போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது.
தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இந்த தகவல், அடிமை அரசின் நிர்வாக குளறுபடியை காட்டுகிறது. கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிகட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்கு காரணம் என விமர்சித்துள்ளார்.
இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அடிமை அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும், கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்திய அடிமைகளும்-அவர்களை ஆட்டுவிக்கும் ஆதிக்கவாதிகளுமே பொறுப்பு என்றும் குற்றசாட்டியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…