உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் என்ற செய்தி வந்தது.
இதற்கு இடையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிறு சிறு தவறுக்காக கூட்டணி உடைந்ததாக அர்த்தம் இல்லை. இது உடைய போவது இல்லை. எனவே இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும். அதுமட்டுமின்றி பேசிய கருத்துக்களை மறந்து ஒற்றுமையாக இருந்து கூட்டணியை இருக்கட்சியும் தொடர வேண்டும்.
கூட்டணி இல்லை என யாரும் அறிவிக்கவில்லை. கருத்து வெறுபாடுகளால் கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை என்றார். ஏன் பிஜேபி, அதிமுக இடையில் கூட கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளது.
எல்லா பத்திரிக்கை படிக்கலாம்.அவர் அவர் கட்சி பத்திரிகையை அந்த கட்சியினர் தாங்கி பிடிப்பார்கள்.துக்ளக் விழாவில் கலந்து கொண்டதன் காரணமாக அவர் துக்ளக்கை புகழ்ந்து கூறி இருக்கலாம். முரசொலி விழாவில் கலந்து கொண்டால் முரசொலியை புகழ்ந்து பேசி இருப்பர்.நமது அம்மா” படித்தால் இருக்கிற மூளையும் இல்லாமல் போய்விடும் என்று தான் கூட சொல்லலாம், என்றாலும் எல்லா பத்திரிகைகளையும் படிப்பது நல்லது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…