மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு யார் காரணம்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் 16வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினார். இவ்விழாவில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர்கள் தான் நாளைய தமிழகம் என்றும் கடந்த இரண்டு நாட்களாக நீட் தேர்வுக்கு எதிராக 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு யார் காரணம்? இங்கு எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. தங்கள் அரசியல் வெற்றிக்கு செய்யப்படுகிறது. மூளைச்சலவை செய்து இளைஞர்கள் உயிரோடு விளையாடுவதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஊழல் செய்யும் நிலைதான் தற்போது உள்ளது. நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி அதிமுக ஆட்சியை பார்க்கிறோம். இலவசத்திற்கு பின்னால் போனால் தமிழகம் வளர்ச்சி அடையாது. மொழி, படிப்பு, சாதியை வைத்து அரசியல் செய்கின்றனர்.
மக்கள் வாய்ப்பு அளித்திருந்தால் கேப்டன் அறிவித்த திட்டங்கள் தமிழகத்தில் கிடைத்திருக்கும். இளைஞர்களே மாற்று அரசியலை நாம் உருவாக்க வேண்டும். இந்திய முழுவதும் ஒரே கல்வி முறை என்பதை தேமுதிக ஏற்றுக்கொள்ளும். நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களை கொடுமைப்படுத்தும் கலாச்சாரத்தை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. 2021ல் மாபெரும் சக்தியாக தேமுதிக வரும். அனைவர்க்கும் ஒரே கல்வி என்பதை தேமுதிக வரவேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…