இல்லாத அளவிற்கு உயர்ந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி! முதல்வர் ஸ்டாலின் பதிவு!

9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

mk stalin Economic growth

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்த வளர்ச்சியாகும். 2023-24 நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.15,71,368 கோடியாக இருந்தது, இது 2024-25 நிதியாண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2021-22 முதல் தொடர்ந்து 8% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சி விகிதத்தை பராமரித்து வருகிறது. 2024-25 ஆண்டில் இந்த 9.69% வளர்ச்சி, மாநிலத்தின் கடந்த 10 ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். இதற்கு முன்பு 2017-18 ஆண்டில் 8.59% வளர்ச்சி பதிவாகியிருந்தது. இப்போது இந்த முறை இதுவரை இல்லாத வளர்ச்சிக்கு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

உதாரணமாக சேவைத் துறை (Tertiary Sector): 12.7% வளர்ச்சியுடன் இது மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.

இரண்டாம் நிலை துறை (Secondary Sector): உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் 9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

அரசு முயற்சிகள்; தமிழ்நாடு அரசின் உள்கட்டமைப்பு முதலீடுகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு திட்டங்கள் இதற்கு உதவியுள்ளன.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ” 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது. அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்” எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும், தேசிய அளவில் இந்தியாவின் GDP வளர்ச்சி 2023-24 ஆண்டில் 8.15% ஆகவும், 2024-25 ஆண்டிற்கான மதிப்பீடு 6.48% ஆகவும் உள்ளது. தமிழ்நாடு இதை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு 2024-25 ஆண்டில் முதலிடத்தில் உள்ளது குஜராத், பீகார் போன்ற சில மாநிலங்களின் தரவு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin