Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
பஞ்சாப் மாணவி உயிரை காப்பாற்றிய ராணுவ வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியலாவில் பக்ரா எனும் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் 19 வயது மாணவி ஒருவர் தவறுதலாக உள்ளே விழுந்து விட்டார். உடனே அருகில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் உடனடியாக கால்வாயில் துணிச்சலுடன் குதித்து அந்த மாணவியை உயிருடன் காப்பாற்றி உள்ளார்.
இவரது இந்த தைரியமான செயலை கண்டு ராணுவ உயர் அதிகாரி நவநீதகிருஷ்ணனுக்கு பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அதில், இன்னல் நேரும் தருணத்தில் தன்னுயிர் பாராமல் பஞ்சாப் மாணவியின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…