தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய முதல்வர் , தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. எனவும், 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்றும், இன்றிரவு தமிழகத்திற்கு முதலில் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடும். என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது நிலையில் உள்ளது. அது, 3-ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக கொரோனா தொற்று தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
நாளை மறுநாள், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் ஊரடங்கு பற்றிய முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநில முதல்வர், அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…