ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடம் கற்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு இணையதளத்தை உருவாக்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் போக்குவரத்து சேவை, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் பல மாநிலங்களில் 1 முதல் 9 வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், பல கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டபோது 10 வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 14 தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. பின்னர் மத்திய அரசு மீண்டும் 19 நாள்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் 10 வகுப்பு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மேலும், 10 வகுப்பு தேர்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இதையெடுத்து தற்போது அனைத்து மாணவர்களும் தொடர் விடுமுறையில் வீட்டில் உள்ளனர். சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும், ஜூம் செயலி மூலமாகவும் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை இதனால், பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் மூலமாக கல்வி கற்க சிறப்பு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களையும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ள உள்ள பொதுத்தேர்வுக்கும் தயார் செய்து கொள்ளலாம்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…