மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்திற்க்கு அதிக மழைப்பொழிவை அளிப்பதில் வடகிழக்கு பருவமழை தான் அதிக முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும், இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. மழை அளவு பதிவாகும்.
இந்த பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரமோ அல்லது மாத இறுதியிலோ தொடங்குவது வழக்கம்.
அதன்படி, தற்போது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
தென்மேற்கு பருவமழையானது 28-ந் தேதி (நேற்று) இந்திய பகுதிகளில் இருந்து விலகி தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது என்றும், அடுத்து வரும் 2 நாட்களுக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும்
வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கனமழையை பொறுத்தவரையில் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசியில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் கனழமை கொட்டி வருகிறது.
இதற்கிடையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025