இன்று முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த சில்லறை விற்பனை கடைகள் இன்று முதல் திறக்கப்படும். மால்கள், மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025