10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த கோவில் அர்ச்சகர் கைது.
இன்று பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. பெண்களை பாதுகாப்பதற்காக அரசு சிறப்பு சட்டங்களை இயற்றினாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், சிவகுமார்(59) என்னும் கோவில் அர்ச்சகர், கடந்த புதன்கிழமை அன்று, சென்னை மாடிப்பக்கம் அருகே உள்ள 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, பயத்தில் சிவகுமார் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து, அதிகாலை 5 மணியளவில் தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என வந்த சிவாகுமாரை கையும், களவுமாக பிடித்த சிறுமியின் பெற்றோர் அவரை வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டி வைத்து விட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் சிவகுமாரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…