வருவாய்க் கோட்ட, ஆட்சியர் அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களுக்கு அனுமதி இல்லை; சுற்றறிக்கை வெளியீடு.!

தமிழக அரசு ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலங்களில் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிய அனுமதி இல்லை என அறிக்கை.
தமிழகத்தின் தாலுகா அலுவலகம், வருவைக்கோட்ட அலுவலர்களின் அலுவலகம், மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்களில் ஒப்பந்ததாரர் முறையில் அவ்வப்போது பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இனி தனி நபரோ அல்லது தற்காலிக பணியாளர்கள் போன்றவர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை செயலாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.