டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு…!

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வழக்கறிஞர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரம் அடைந்து, அதில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.