மத்திய பிரதேசத்தில் பழங்குடியின நபர் மீது, சிறுநீர் கழித்த சம்பவம்: ராகுல் காந்தி கண்டனம்.!

ம.பி யில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயலை, ராகுல் காந்தி வன்மையாக கண்டித்துள்ளார்.

Rahul FMP

ம.பி யில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயலை, ராகுல் காந்தி வன்மையாக கண்டித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது, ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒருவாரம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் சிறுநீர் கழித்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் பெயர் பிரவேஷ் சுக்லா என்பதும், இவர் பாஜகவை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியானதை அடுத்து, அந்த தொகுதி எம்.எல்.ஏ இதனை மறுத்து கூறினார், பிரவேஷ் சுக்லா என் தொகுதியைசேர்ந்தவர் என்பதால் எனக்கு தெரியும் அதனால் அவர் பாஜக நிர்வாகி கிடையாது என்று தெரிவித்தார்.

unknown node

இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு, ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறும்போது, பாஜக ஆட்சியில் தான் பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கு இது போன்ற அநியாயங்கள் நடக்கின்றன. பழங்குடியின மக்களிடம், இது தான் பாஜகவின் உண்மையான முகம் என அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.