கொரோனா ஊரடங்கால் பூக்கள் செடியிலேயே பூத்து குலுங்கி அழுகி வீணாவதாக தென்காசி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு கூட அதிகளவில் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
எனவே மலர் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் செடிகளில் பூத்துக்கலுங்க கூடிய மலர்களை என்ன செய்வதென்று தெரியாமல் நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தென்காசி பகுதியை சேர்ந்த விவசாயிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சி போன்றவற்றுக்கு மிகக் குறைந்த அளவிலான மலர்களையே வியாபாரிகள் வாங்குவதாகவும், தேவைக்கு போக எஞ்சியுள்ள மலர்கள் வீணாக போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சாகுபடி செய்யக்கூடிய மலர்கள் பெரும்பாலும் குப்பையில் கொட்டபடுவதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டும் இதே போல தான் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இந்த ஆண்டாவது நஷ்டத்தில் இருந்து மீளலாம் என நம்பியிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் மேலும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளனர். தற்போது மலர்கள் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி வீணாக அழுகி உதிர்வதாக வருத்தம் தெரிவித்துள்ள விவசாயிகள், நஷ்டத்திற்கு ஆளாகி உள்ள விவசாயிகளுக்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…