தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராக முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றார். இவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உரிமையும் செய்து வைத்தார்.
இதையடுத்து, அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் நினைவிடங்கள் சென்று மரியாதை செலுத்திய பின் தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், முதற்கட்டமாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுளார்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…