ஏரல் அருகே தனியாக வசித்து வந்த 76 மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது.
ஏரல் அருகே பண்டார விளை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவருடைய மனைவி முத்துக்கிளி 76 வயதான இவருக்கு 6 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளார்கள் இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர் . செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முத்துக்கிளி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
மேலும் இதனைநோக்கமிட்ட மர்ம நபர் நேற்று முன்தினம் மதியம் முத்துக்கிளி வீட்டிற்குள் சென்று கதவை தட்டினர் உடனே முத்துக்கிளி கதவை திறந்து வெளியே வந்தார் .அப்போது அங்கு நின்ற மர்ம நபர் தனது உடலை போர்வையை வைத்து போர்த்தி இருந்தார்.
மேலும் அவர் திடீரென முத்துக்கிளி கழுத்தில் அணிந்திருக்கும் மொத்தம் 20 பவுண்ட் மதிப்பிலான 2 தங்க சங்கிலிகளை பிடித்து இழுத்துள்ளார், உடனே சுதாரித்துக்கொண்ட முத்துக்கிளி நகைகளை கைகளால் இருக்கமாக பிடித்து திருடன் திருடன் என்று கூச்ச லிட்டுள்ளார் , மேலும் அப்போது அவரது இரண்டு நகைகள் ஒரு நகை மட்டும் அறுந்து துண்டானது மேலும் அதன் ஒரு பகுதியான 6 பவுன் நகை மட்டும் முத்துக்கிளி கையில் இருந்தது.
மற்றொரு 8 பவுன் தங்கச் சங்கிலியையும் அறுந்த ஒரு பகுதியான 6 பவுன் நகையும் பறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார் , அவரை அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்று பிடிக்கமுடியவில்லை இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் ஏரல் அருகே பட்டப்பகலில் மூதாட்டி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…