கொரோனா தோற்றால் உயிரிழந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்சனைக்கு சிகிக்சை பெற்று வந்தார்.
அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.
மேலும், தனது 62-வது பிறந்த நாளான இன்று இவர் காலமானார். ஜெ.அன்பழகன் அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவரது பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என உறவினர்களும், கட்சியினர் நினைத்து இருந்தநிலையில், அவரது மறைவு உறவினர்கள், கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்பொழுது ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…