சென்னை மாயவரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் மோனிகா (20). இவருக்கும் உறவினரான மனோஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் ,மோனிகா கடந்த 15-ம் தேதி தன் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சம் அடைந்த மகேஷ் மோனிகாவிற்கு போன் செய்து பார்த்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் மகேஷ் மோனிகாவின் நண்பர்களுக்கும் போன் செய்தும் , வீட்டிற்கும் சென்று விசாரித்தனர்.
மோனிகா எங்கேயும் இல்லை பின்னர் மகேஷ் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை மோனிகா தனது தந்தை மகேஷுக்கு போன் செய்து தான் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு மோனிகா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மோனிகா கார்த்திக் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும் , இதற்கு தனது தந்தை மகேஷ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் மனோஜ் உடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் பெற்றோர்களை வரவைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…