கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை சமாளிக்கும் வகையில், ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கும் தமிழக அரசின் புதிய திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியிலான பாதிப்புகளில் இருந்து மீள்வது குறித்து ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி. ரங்கராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தன் பரிந்துரைகளை, சமீபத்தில், முதல்வர் எடப்பாடி அவர்களிடம் அளித்துள்ளது.
அதில், ‘பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில், ஏழை, எளிய மக்களுக்கு, பண உதவி வழங்கலாம்’ என, அதில், குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில், அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, இந்த பண உதவியை வழங்குவது குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.’அம்மா கொரோனா பேரிடர் நிவாரண நிதி’ என்ற பெயரில், ஏழை, எளிய குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மட்டும், 3,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை வரும், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். நிர்வாக நடைமுறைகளுக்குப் பின், மிக விரைவில், இந்த நிதி, தமிழக அரசுக்கு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், மிக விரைவில், 2,000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பான அறிவிப்பை, தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…