ஒன்றிய குழு தலைவர்களுக்கு 200 கார்களை தந்த முதலமைச்சர்!

MK Stalin

சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு வழங்கினார் முதலமைச்சர்.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களின் பயன்பாட்டுக்கு 200 புதிய கார்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு வழங்கினார் முதலமைச்சர். அதன்படி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 கார்களை சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுபோன்று, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.30.72 கோடி மதிப்பில் புதிய அரசு கட்டடங்களை 7 மாவட்டங்களில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சியில் ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களும் திறக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்