தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பக்தர்களின்றி கொண்டாட்டம்.
இந்தாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம், நேற்று காலை 10.45 மணியளவில் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளல் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2ம் நாள் திருவிழாவான இன்று முதல் 25ம் தேதி வரை தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், வாகனங்களில் வந்த பக்தர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…