வேலூரில் தேர்தல் நடக்காமல் போனதற்கு திமுகவினரே காரணம்-ஏ.சி.சண்முகம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே அதிமுக சார்பில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தொகுதிக்கு இவ்வளவு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை .வேலூரில் தேர்தல் நடக்காமல் போனதற்கு திமுகவினரே காரணம் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025