சபரிமலை அயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையின் படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பக்தர்கள் தாங்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், ‛ நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து முடிவு விரைவில் எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…