சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.மேலும் கமல்ஹாசன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.பின்னர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று விசாரித்த டெல்லி பட்டியாலா நீதிமன்றம்,வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…