அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழக கோவிட் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளியாகி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக இன்றைய செய்தி தெரிவிக்கிறது.
தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 236 கொரோனா இறப்பு எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று ஜூன் மாதத்தில் செய்தி வெளியாகியது. தமிழகத்தில் கொரொனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,528 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…