அரசு கிராம சபை கூட்டத்தை கூட்டவில்லை என்று தான் திமுக நடத்தி வருகிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அதிகாரிகள் தான் நடத்த வேண்டும். அதைவிட்டு ஸ்டாலின் நடத்துகிறார். சம்மணங்கால் போட்டுகொண்டு கூட்டத்தை நடத்துகிறார். கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, துணை முதல்வர் பேச்சுக்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலின், கிராம சபை கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் நடத்துகிறார். கூட்டத்தை நடத்த இவருக்கு என்ன அதிகாரம் இருக்கு, அரசாங்கம் தான் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என துணை முதல்வர் பேசியிருக்கிறார். அரசு கிராம சபை கூட்டத்தை கூட்டவில்லை என்று தான் திமுக நடத்தி வருகிறது. இதுகூட புரியாமல் பேசியுள்ளார். கிராம சபை கூட்டத்தை அரசின் சார்பில் தான் நடத்த வேண்டும்.
அதை நான் மறுக்கவில்லை. ஆண்டுக்கு 4 முறை கூட்டத்தை கூட்ட வேண்டும். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே 1 தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும். இதுதான் மரபு, அரசின் சார்பில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது உள்ள இந்த ஆட்சியில், கடந்த 10 ஆண்டு காலத்தில் அந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றசாட்டியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…