ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன்!

கோவை உயிரியல் பூங்காவில் ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு.
ஆசியாவில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, சீனா, தைய்வான் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படக்கூடிய மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு தான் கண்ணாடிவிரியன். இப்பாம்பு நான்கு வகைகளை கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஏறக்குறைய ஏற்படக்கூடிய அனைத்து பாம்பு விஷக்கடி உயிர் இழப்புகளுக்கும் இவைதான் காரணம்.
தடித்த உடலுடன் பெரிய முக்கோண வடிவ தலை கொண்ட இந்த பாம்பு பெரிய மூக்கு துவாரம் உடையதாகவும் காணப்படும். இந்நிலையில் கோவை மாவட்டத்திலுள்ள வாஉசி உயிரியல் பூங்காவில் இந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தக் குட்டிகளை வனத்துறையினர் பத்திரமாக கையாண்டு அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு எடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025