மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அதே ஊரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் அருகே உள்ள காட்டு பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேய்ச்சலை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஆடுகள் வீட்டில் இருந்த தண்ணீரை அருந்திய சிறிது நேரத்திலேயே துடிதுடித்து அடுத்தடுத்து உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிரிச்சியடைந்த ஜெயப்பிரகாஷ் அருகில் இருப்பவர்களிடம் தகவல் கூறினார். அப்போது அந்த வழியாக தனது மாட்டை அழைத்துக்கொண்டு வந்த ராமு என்பவர் ஆடுகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
இதனிடையே ஆடுகள் அருந்திய தண்ணீரை ராமுவின் மாடும் அருந்தி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த உத்தப்பநாயக்கணுர் போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் செந்தாமரை ஆகியோர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…