துக்க காரியத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்.!

- கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அய்யனார்- அஞ்சலி ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்து உள்ளது.
- நேற்று இரவு அய்யனார் துக்க காரியத்திற்கு வருமாறு அஞ்சலியை அழைத்து உள்ளார்.வர மறுத்ததால் அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவி கழுத்தை நெறித்து உள்ளார்.
சென்னை பள்ளிகாரணையில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி அஞ்சலி .இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது .இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அய்யனார் உறவினர் ஒருவரின் துக்க காரியத்திற்கு வருமாறு தனது மனைவி அஞ்சலியை அழைத்து உள்ளார்.ஆனால் அஞ்சலி துக்க காரியத்திற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது அஞ்சலியை தாக்கிய அய்யனார். தகராறில் மனைவி கழுத்தை நெறித்து உள்ளார்.இதில் மயங்கி விழுந்த அஞ்சலி சம்பவ இடத்திலே இறந்து உள்ளார்.இதை தொடர்ந்து அய்யனாரை கைது செய்த பள்ளிகாரணை போலீசார் உயிரிழந்த அஞ்சலி உடலை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025