கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு!

Published by
லீனா

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (46). இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், விருத்தாசலத்தில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றிய பகுதியில், கொரோனா தடுப்பு பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட இவர், அப்பகுதி மக்கள் மத்தியில், பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அதிகாரியாக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த 10ம் தேதி  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழப்பதற்கு முன்பதாக தனது முக நூல் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே! என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே! எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே! எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே! அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே! வருவாய ஆய்வாளர்களே ! கிராம உதவியாளர்களே ! உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக்கொள்கின்றேன். COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெருகின்றேன்! சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன்!’ என்று பதிவிட்டுள்ளார்.

இவர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில், இவருக்கு மக்கள், அவரது முகநூல் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

1 hour ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago