கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார்.
மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுகவினர் வரிசையாக இந்த பிரியாணியை வாங்கி தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். மேலும் நின்றபடியே பிரியாணி சாப்பிட்ட அவர், பெண் தொண்டர்களிடம் சென்று நலம் விசாரித்ததோடு, பிரியாணி நன்றாக உள்ளதா? என்றும், நிறைய வாங்கி சாப்பிடுங்கள் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த செயல் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…