ஆவின் பால் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் 5 லிட்டர் கொண்ட பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுவரை ரூ.210க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் இன்று முதல் ரூ.220ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே பால் முகவர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பால் கொள்முதல் பால் உற்பத்தியாளர்கள் உயர்த்தக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் 5 லிட்டர் கொண்ட பச்சை நிற நிலப்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ கடைகள், தேநீர் விடுதிகள் மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காப்பி போன்றவற்றிக்கு பயன்படுத்தக்கூடிய இந்த 5 லிட்டர் பால் விலை உயர்வால், டீ மற்றும் காப்பி உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான விலையும் உயரக்கூடும் என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, ஆவின் பால் உள்ளிட்ட பொருட்கள் மீதான விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது பால் மட்டுமே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர என அனைத்து தரப்பினர்களுக்கும் பால் ஒரு அத்தியாவசிய உணவு பொருட்களில் ஒன்றாகும். தற்போது இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.