#Breaking:சற்று முன்…இனி மாணவர்கள் வரும் வாகனங்களில் இவை கட்டாயம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

Published by
Edison

சென்னை:பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் ரிவர்சில் வந்தபோது,விபத்து ஏற்பட்டதில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே,இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில்,பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக  விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,15 நாட்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்ட நிலையில்,கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

  • மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும்,அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும்.
  • பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிக அளவில் ஏற்றக்கூடாது.
  • பள்ளி வாகனங்களை ஆண்டு தோறும் முறையாக பராமரித்து உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

6 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago