2 லட்சம் முதல் 30 லட்சம் வரையில்… விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த உதவி தொகைகள்.!

Athletics

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழக விளையாட்டு துறை தற்போது திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை அரசு நேற்று வெளியிட்டுள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் இந்த உதவி தொகையானது வழங்கப்பட உள்ளது.

முதலில் தலை சிறந்த வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு மட்டும்) என்று, அவர்களுக்கு அதிகபட்ச உதவி தொகை ஒரு ஆண்டுக்கு 30 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் 25 நபர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

athletics in tamilnadu
[Image source : Sun News]
இரண்டாவது பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கு ஊக்குவிக்கும் திட்டம். இதில் அதிகபட்சமாக 75 நபர்களுக்கும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 12 லட்சம் வரையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இறுதியாக வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம். இதில் அதிகபட்சம் 100 நபர்கள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in அதன் மூலம் தங்களது விண்ணப்பங்களை 5.5.2023 முதல் 20.5.2023 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 95140 00777 மற்றும் 78258 83865 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies