பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர்!

தமிழக அரசுடன் பல்வேறு முரண்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்என் ரவி 5 நாள் பயணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநரிடம் அதிமுக மனு அளித்த நிலையில், டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் ஆர்என் ரவி.
தமிழக அரசுடன் பல்வேறு முரண்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் குறிப்பாக, செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என தெரிவித்த நிலையிலும், அமைச்சராக தொடர தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ள சமயத்தில் ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். மேலும், இது தொடர்பாக டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025