வெற்றி பதக்கங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியினர்.!

CM MK Stalin and Tamilnadu Football Team

 தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு கால்பந்தாட்ட பெண்கள் அணியினர் தமிழக முதல்வர் மு.கஸ்டாலினை சந்த்தித்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவினான பெண்கள் சீனியர் கால்பந்து போட்டி தொடர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடித்தந்து. இதில் ஹரியானா மாநில அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 2-1 என்கிற கோல் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.

2018ஆம் ஆண்டை தொடர்ந்து இந்தாண்டு தனது 2வது வெற்றியை தமிழக சீனியர் பெண்கள் கால்பந்தாட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெற்றி பெற்ற தமிழக அணியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து தெரிவித்து வந்தனர்.

வெற்றி பதக்கங்களுடன் நேற்று சென்னை திரும்பிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு நல்ல வரவேற்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது தமிழக தலைமை  செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது விளையாட்டு வீராங்கனைகள் முதல்வரிடம கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்