12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நலன், மனநலனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இதனையடுத்து,12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்நிலையில்,12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,”அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து,அதனை நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதிக்குள் http://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும்,சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்களுக்கான பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…
டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…
சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…