தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி உறுதி

தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.மேலும் நிலம் கையகப்படுத்தியதற்கு தடையும் விதித்திருந்தது.
எனவே சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதன்படி விசாரணை நடைபெற்றது.அதில் சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் இன்று சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் ப ழனிசாமி திறந்து வைத்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில்,நீதிமன்றத்திலுள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும். உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது.மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம்.தனிநபரின் வசதிக்காக அல்ல என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025