கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் காலியாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று கூறி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். நாகையில் விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், சிறு குறு தொழில் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது என்றும் பல்வேறு கருத்துகள், கோரிக்கைகளை அவர்கள் தெரிவித்தனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும், விழுப்புரம், கடலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளிப்பூங்கா நாகை மாவட்டத்தில் தொடங்கப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றுகுறிப்பிட்டுளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…