வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 வருடங்களில் ரேஷன் கடைகள் இருக்காது – திருமாவளவன்

Published by
பாலா கலியமூர்த்தி

வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 வருடங்களில் ரேஷன் கடைகள் இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கொட்டும் மழையிலும் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டையும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் அறவழியில் தொடர்ந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத புதிய போராட்டம்.

இந்த போராட்டம் கைவிடப்படும் என்று எண்ணிய மோடியின் அரசு, அவர்கள் நெஞ்சாக்குழியில் உள்ளங்காலை வைத்து அழுத்துவது போல, குரல்வளையை பிடித்து நெறிப்பது போல விவசாயிகள் டெல்லியை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் ஒரு யுகபுரட்சி, வேளாண் சட்டங்கள் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமானவை, இது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான போராட்டம். மோடி அரசை தூக்கி எறிவதற்கான ஒரு புரட்சி போராட்டம். வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 வருடங்களில் ரேஷன் கடைகள் இருக்காது என பேசியுள்ளார்.

மேலும், இந்திய அரசமைப்பு சட்டம்தான் சமூக நீதியை உருவாக்குகிறது. ஆகவே இந்த அரசமைப்பு சட்டம் இருக்கும் வரையில் நாம் எப்பொழுதும் சகோதரத்தை பாதுகாக்க முடியாது, மேல் சாதி மேல் சாதிதான், கீழ் சாதி கீழ் சாதிதான், கீழ் சாதிக்கு உரிய வேலை கீழ் சாதி செய்யவேண்டும். கீழ் சாதி என்றால் வெறும் தலித் மட்டும் கிடையாது. பார்ப்பவர்களை தவிர மற்ற அனைவருமே தராதரத்தை தாழ்த்தி கீழ்ச்சாதிதான். அது சத்திரியனாக இருந்தாலும் கீழ்ச்சாதி தான், வைசியனாய் இருந்தாலும் சரி, சூத்ரியனாய் இருந்தாலும் சரி என்று பேசியுள்ளார். இதில், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago