சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 93 வயதான முதியவர். இவர் மீன்வளத் துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 1980-ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார். அவரது வீட்டிற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு தனது பென்ஷன் பணத்தை எடுப்பதற்காக சென்றிருந்தார். அப்போது தலைகவசத்தை அணிந்து கொண்டு எதிரில் வந்த ஒருவர், சதாசிவத்தை ஏற்கனவே தெரிந்தவர் போல் நலம் விசாரித்தார். பின்பு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்ட அந்த நபர், அருகில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறினார் சதாசிவம்.
இந்நிலையில், வங்கிக்கு சென்று ரூ.20 ஆயிரம் எடுத்து கொண்டு திரும்பிய போது, பின் தொடர்ந்து கவனித்த அந்த நபர், திரும்பவும் அந்த முதியவரை சந்தித்தார். தனக்கு வந்த வேலை முடிந்துவிட்டது, வீட்டு வழியாக தான் செல்கிறேன், வண்டியில் ஏறுங்கள் தாத்தா என கூப்பிட்டார். இதை நம்பி, தனது குடும்பத்தினருக்கு தெரிந்த நபராக இருக்கும் என நினைத்து அவருடன் சதாசிவம் சென்றார். வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு அந்த நபர் சென்ற பிறகு கைப்பையை பார்த்த போது தான் ரூ.20 ஆயிரம் அந்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள அந்த நபரின் அடையாளங்களை வைத்து தேடி வருகின்றனர். போலீஸ் கூறுகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் முதியவர்களை அணுகி பாசமாக பேசி உதவுவது போல் சிலர் பணம் திருடி வருகிறார்கள், தெரியாத நபர் யாரும் தானாக முன்வந்து உதவி செய்வதாக கூறினால் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதே வேளையில் நகை, பணத்துடன் வெளியில் செல்லும் முதியவர்களுடன் குடும்பத்தினர் யாராவது உடன் சென்றால் இது போன்ற மோசடி வழிகளை தவிர்க்கலாம் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…