நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் கோடம்பாக்கம் 136-வது வார்டு கவுன்சிலர் பதவியில் போட்டியிட 22 வயது இளம்பெண் நிலவரசி துரைராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 136 வது வார்டில் 22 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளராக நிலவரசி துரைராஜ், இன்று தனது வேட்பு மனுவை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எனக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டதற்கு முதல் காரணம் எனது அப்பா. ஏனென்றால் அப்பா 35 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மற்றோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும், தனது வார்டுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…