தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம் – அமைச்சர் வேலுமணி

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை அடாவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி இருப்பவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தான் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், அவர்களது சொந்த ஊர்களில் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், கோவை மாநகராட்சியில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து வந்துள்ள 1,100 நபர்கள், 4 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால், 0422-2302323 என்ற எண்ணுக்கு அவர்களது வீடுகளுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025