சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஹெராயின், போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது.
இந்நிலையில் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான ஒரு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஒரு கல்லூரி மாணவனிடம் இருந்து சிறிய பொட்டலத்தை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் ஹெராயின் இருந்தது. உடனே அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை மண்ணடியில் தனது நண்பன் ஒருவர் கொடுத்ததாக கூறினார்.
பின்னர் போலீசார் அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர்.அதில் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் போதைப்பொருட்கள் வாங்கியதாக கூறினார்.விரைந்து சென்ற போலீசார் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் உள்ள வீட்டில் இருந்து 40 கிராம் எடை கொண்ட ஹெராயின் கைப்பற்றினார்கள்.
இதை பதுக்கி விற்ற மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சபீர் அகமது (28), தாரூல் இஸ்லாம்(26) , ஜவாறிரூல் ஷேக்(22), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…