பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் இரண்டாவது நாளான இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியபோது, நேற்று திருப்பூர் மாவட்டம் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள், அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை துணை தலைவர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆகையால், விவசாயிகளின் கருத்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை துணை தலைவர்கள் கருத்துக்களை ஒன்றாக சேர்த்து அம்மா அரசிடம் நீண்ட காலமாக விவசாயிகள் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்று கூறிய முதல்வர், விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது என்றும் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…