TN Assembly : எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம்.! முடியும்.. முடியாது என சபாநாயகர் பதில் கூற அதிமுக கோரிக்கை.! 

ADMK MLA's

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு கடந்த புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் . அவர் கூறுகையில்,  வருகிற அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடும் என்றும், அன்று நிதி மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கு மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உள்ளார் என்று குறிப்பிட்டார்.

அப்போது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் இருக்கைகளில் ஏதேனும் மாற்றம் வருமா.? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பழையபடியே இருக்கைகள் அமைக்கப்படும். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக சார்பில் இருந்து எந்த கோரிக்கைகளும் மீண்டும் வரவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அதிமுக சார்பில் தேர்ந்தெடுத்துள்ளோம். அதனால், எதிர்க்கட்சி தலைவர் அருகில் உள்ள இருக்கையினை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அதிமுக எம்எல்ஏக்கள் பேசுகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 முறை கடிதம் எழுதி சபாநாயகர் அப்பாவுக்கு கொடுத்தோம்.

இன்று 3வது முறையாக கடிதம் எழுதி சபாநாயகருக்கு அளித்துள்ளோம். இந்த கோரிக்கைகள் பரீசீலினையில் இருக்கிறது என சபாநாயகர் குறிப்பிட்டார். நாங்கள் எங்கள் கோரிக்கையை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஏற்கனவே கடந்த முறை அதிமுக ஆட்சியில் தற்போது நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் துணை எதிர்க்கட்சி தலைவராக அமர வைக்கப்பட்டார்.

அதே போல் அதற்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியாக தேமுதிக பொறுப்பில் இருந்த போது, எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்தும், துணை தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரனும் அமரவைக்கப்பட்டனர். சட்டமன்ற விதிப்படி இதனை செய்தார்கள்.  அதே போல அதிமுக சார்பில் இபிஎஸ் தலைமையில் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் இடம்பெற வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்ற முடியுமா அல்லது நிறைவேற்ற இயலாதா .? கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று கூறுகிறார்கள் அது என்ன பரிசீலனை விவரம் என்பது பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அதற்கு பிறகு இபிஎஸ் நடவடிக்கை எடுப்பார் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக  சந்தித்து செய்தியாளர்களிடம் கூறினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts