டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு… 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி..

தேர்வு கடந்த 2017 -ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குருப் 2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் அதிகமானோர் தேர்வாகினர். இதையெடுத்து இது சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி அரசு வேளைகளில் வேலை செய்து வரும் சென்னையை சேர்ந்த பூர்ணிமாதேவி , வேலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் குருப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற இடைதரகர் நாரயாணனுக்கு ரூ.21 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர்.
இதையெடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி 3 பேரும் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்போது விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமின் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது.
இதையெடுத்து சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025