TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு.
TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2A தேர்வுக்குக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சியிலும் வெளியிடப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனிடையே. கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தாஷ்கண்ட் : 2025 FIDE மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு…
தஞ்சாவூர் : புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு,…
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…