“கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி.!

கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துளார்.

AIADMK

தஞ்சாவூர் : புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நேற்றைய தினம் தஞ்சாவூர் ஓரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் மழையை பொருட்படுத்தாமல் அதிமுகவினருடன் இணைந்து, கூட்டணிக் கட்சியினரும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.

அதன்படி, ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது மக்களிடம் உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ” ஓரத்தநாடு பகுதி விவசாய தொழில் நிறைந்த தொகுதி. கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக காப்பாற்றும். விவசாய தொழிலாளிகளின் கஷ்டத்தை நான் நன்கு அறிவேன். பயிர்க்கடன்களை 2 முறை அதிமுக அரசு தள்ளுபடி செய்தது. குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம்.

உடலுக்கு உயிர் எப்படியோ, அதுபோல விவசாயத்துக்கு உயிர் நீர். தண்ணீர் வீணாக போவதை தடுக்க, தடுப்பணைகள் கட்டினோம். கடந்த ஆட்சியில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க கையெழுத்திட்டவர் ஸ்டாலின். நாங்கள் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கினோம்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை இணைத்தோம். இந்தியாவிலேயே அதிகமாக பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக நிதி பெற்றுத் தந்தது அதிமுக அரசு. 12,000 கோடி பெற்றுத் தந்தோம்.

இன்று நெற்பயிர்களை மழையில் நனைய வைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளுக்காக விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்கினோம். கோவில் நிலத்தில் வசித்து வரும் ஏழைகளுக்கு, அதே நிலத்திற்கு பட்டா வழங்கியது அதிமுக அரசு. நீதிமன்றத்தில் அதற்கு தடை பெற்றுவிட்டனர். மீண்டும் அதை நாங்கள் செயல்படுத்துவோம்

“அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் தந்து, அரசு சார்பில் வீடும் கட்டித்தரப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எக்ஸ் பதிவில், ‘கோயில் பணத்தில் கல்லூரி கட்டக் கூடாது என்று கூறியவர் இப்போது கோயில் நிலத்தை பட்டா போட்டு கொடுக்கிறேன்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்